மேட்ரிக்ஸ் தமிழில்

Posted On ஒக்ரோபர் 30, 2010

Filed under Uncategorized

Comments Dropped leave a response


நீங்கள் மேற்கொள்ளும் பயணம்

நிச்சயமாக மாறுபாடனதொன்றே

பஜாரில் நீங்கள் நுழைந்ததுமே

அன்னியர்களில் ஒருவராய் மாறிவிட்டீர்

பஜாரில் மட்டுமே அன்னியருக்கு

அதிக மரியாதை இருந்தது

பஜாரில் நேர்த்தியாக,வரிசையாக

அமைந்திருந்த கடைகளில்

உற்சாகமான வரவேற்புகளும்

விதவிதமான காட்சிகளும்

காணக்கிடக்கின்றன

விதவிதமான குரல்களில்

ஆழ்ந்திருந்தன எல்லாம்

சுராஸ்யமான விஷயம் என்னவென்றால்

அன்னிய கிரகத்து மனிதர்கள்

வந்து போயிருக்கிற கடைதான்

மனித தலைகள் அங்கு

காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன

நிஜமான மனித தலைகள்

இரத்த ஒழுக்கோ,துர்நாற்றமோயின்றி

நயமான விருப்பத்துடன்

ஒழுங்கமைக்கப்பட்டிருந்தன

கண்ணாடி பெட்டிகளில்

சுழன்று கொண்டிருந்த மனித

தலைகள் புன்னகையோடு இருந்ததை

நீங்கள் பார்த்தீர்கள்

மனித தலைகளை ஆர்வமுடன்

வாங்கிச்செல்லும் அன்னிய கிரகத்துவாசிகளை

யாரும் ஆச்சரியமாக பார்க்காத்தும்

விசித்திரமானதுதான்

சில அன்னியகிரகத்துவாசிகள்

ஜந்தாறு தலைகளை சேர்த்து வாங்கினர்

பஜாரை விட்டகன்று

வெளியே வந்தபோது

நீங்கள் உங்கள் தலையை

தொட்டுப் பார்த்ததை எப்படி

வர்ணிக்க இயலும்?

நிச்சயமாக இந்த பயணத்திலிருந்து

மீண்டெழுந்த போது

இருக்கையில் அமர்ந்திருந்தீர்கள்

உங்களை சுற்றி தொழில்நுட்ப கருவிகள்

இயங்கிக்கொண்டிருந்தன

பிந்தலையில் திருகிட்டு

உள்நுழையும் இயந்திரம்

விலகி கழன்றிருந்தது

மாமிசக்கடை

Posted On ஒக்ரோபர் 30, 2010

Filed under Uncategorized

Comments Dropped leave a response


மாமிச கடைமுன் கூடியிருக்கும் மக்கள்

மாமிசத்தை மொய்க்கும் ஈக்களை குறித்து

கவனம் கொள்வதில்லை

மாமிசத்தை விலைக்கு வாங்குவதற்கு முன்

ஊர்ஜிதம் செய்யப்படுகிற மனத்தடையயல்லா

நிலை ஒரு முறையேனும் வாய்க்க வேண்டும்

மாமிசக்கடையில் வெட்டி தறிக்கும்

மாமிசங்களை மட்டுமே கணக்கிலெடுப்பதால்

எலும்புகளை குறித்த குறை

அப்படியே இருக்கிறது

மாமிசம் வெட்டுபவன் முன்பு

ஆடு போல் நிற்கிற மக்கள்

தங்கள் இயலாமையை

வெளிப்படுத்துவதே இல்லை

எனினும் மாமிசம் குறித்த நல்லெண்ண

புத்தகத்தை புரட்ட தயராக இல்லை

மாமிசத்துக்கும் எலும்புக்கும்

இடையில் வேறுபடுத்தலை விரும்பாத

மாமிச வெட்டிக்கும்,மாமிச பிரியருக்கும்

இடையில் பெயரிடப்படாத பனிப்போர்

இருக்கத்தான் செய்கிறது

மாமிசத்தை வெட்டி துண்டுகளாக்கி

பைக்குள் நுழைத்து கையில் தரும்

வரையிலாவது குறைந்த பட்சம்

பனிப்போர் நிகழ்கிறது

இடையில் நாய்களுக்கான மாமிசம்

வாங்கும் பிரத்யேக முகங்கள்

எப்போதும் அலட்சியமாகவே

மாமிசத்தை அணுகுகின்றன

பிரயேக முகம் என்பதால்

மாமிசம் வெட்டுபவனும் கண்டு கொள்வதில்லை

மாமிச பட்சணிகளும் கண்டு கொள்வதில்லை

எல்லாவற்றிலும் மொய்த்து தீர்கிற

ஈக்கள் இவை யாதொன்றையும்

அறிவதில்லை.

மஞ்சள் வெளிச்சத்தில் நான் ஒழிந்து கொள்வேன்

Posted On ஒக்ரோபர் 30, 2010

Filed under Uncategorized

Comments Dropped leave a response

 

என் தலைமறைவு பிரதேசத்தில்

நீராகி போகிறதுன் நினைவின் ஒரு சுழி

அகாலத்திலிருந்து நீளுகிறதுன் கரம்

கழுத்தை இறுக்கி விழியை பிதுக்கிக்

கொள்ள செய்யும் வேகம் அசுரம்

தப்பிக்க வழியின்றி ஓடியலைகிறேன்

காற்றாய் வருகிறாய்

கொடுங்கோலெடுத்து வீசுகிறாய்

மேனியிதுவோ என பதைக்க

ரத்தம் கசிய ஓடி ஒளிகிறேன்

சூரிய மறைவு பிரதேசத்தில்

சட்டென நிலவாய் வந்துதித்து

கொடுங்கனல்களை நிரப்பிவிடுகிறாய்

என் கபாலத்தின் புதரிடுக்கில்

சொற்கள் கசைகளாகி அடித்து தள்ளுகிறது

ஈனக்குரலில் முனங்கி பிசாசின் தோற்றம்

கொண்டு நடுவிரவில் புகுந்து கொண்டேன்

சகல எத்தனிப்புகளையும் தாண்டி

ஆந்தையின் கண்களாக மாறி

அபசுரம் எழுப்புகிறதுன் அடிக்குரல்

ஜந்தாவது குரலில் வெளிப்பட்டு போனேன்

என்னையும் அறியாமல்

வெறும் பிண்டமாய் மயிர்களற்ற சதையுமாய்

மண்ணில் புரள்கிறேன்

மஞ்சள் வெளிச்சமாய் வந்து

மண்ணை புரட்டி விடுகிறாய்

மெல்ல உயிர் கசிந்திர்ருக்க கிளியாக்கி

கொண்டு சென்றாய் உன் காட்டுக்குள்

தூங்கும் அழகிகளின் இல்லம்

Posted On செப்ரெம்பர் 6, 2010

Filed under Uncategorized

Comments Dropped leave a response

தூங்கும் அழகிகளின் இல்லத்திற்க்கு

ஒருமுறை சென்றிருந்தேன்

நான் நினைத்ததற்க்கு மாறாக அவர்கள்

தூங்கிக் கொண்டிருந்தார்கள்

நிறைய வாடிக்கையாளர்கள்

கண்விழித்து இருந்தனர்

மெல்லிய கீதம் இசைப்பரப்ப

அறுசுவை உணவுகள் பரிமாறப்பட

வேலைக்காரர்களின் பரப்பரப்புகளுக்கிடையில்

அழகிகள் தூங்கிக்கொண்டிருந்தார்கள்

அவர்களில் பெரும்பான்மையானோர்

ஆடையணிந்திருக்கவில்லை என்பதும்

அவர்களின் முனகும் குரல் கீதயிசையில்

யாருக்கும் கேட்கவில்லை என்பதும்

அநேகமாக நம்பக்கூடிய ஒன்றாகும்

தனித்தனியே அமைக்கப்பட்டிருந்த

படுக்கையறை கட்டில்கள்

காலியாக இருந்தன என்பது

ஆச்சரியமான செய்தியே

சுழல் மின் விசிறிகள்

ஓயாமல் சுழன்றன

சில வாடிக்கையாளர்கள்

உற்சாகமிகுதியில் வாசல்கதவை

தாழிடமறந்து விட்டார்கள் போலும்

மேஜைகளில் தூங்கும் அழகிகள்

யாரும் காணலுறலாம்

வாடிக்கையாளர்கள்

அவர்களது திட்டமிடப்பட்ட

நிர்வாணகோலத்தை கண்டதும்

மகிழ்ச்சியில் குதூகலிக்கின்றனர்

நான் சென்ற அறையின்

தூங்கும் அழகி அநேகமாக

தூக்கத்தின் உச்சத்திலிருந்தாள்

முகத்தில் ஏதொரு சலனமோ

உணர்ச்சியோ இல்லாமல்

கட்டிலில் ஆடையாபரணம் அணிய

நிர்வாணத்தை களைந்திருந்தாள்

அறை கதவுகளை தாழிட்டு

மின்விளக்குகளில் அவளை

காண்பதில் கிலேசம் இல்லாமலில்லை

தூங்கும் அழகிகளோடு இருந்த போது

நான் கண்ட உண்மை விநோதமானது

தூக்கத்தின் மூலம் அவர்கள்

கனவுகளை பெருக்குகிறார்கள்

அந்த கனவுகளில் புகுந்து கொள்ள

யாதுவான திறப்புகள் இருந்தன

கனவினுள் புகுந்து கொண்டதுமே

நறுமண தூபத்தின் புகையில்

அலங்கரிக்கப்பட்டிருந்த ஊர்தியில்

நான் தூங்க தொடங்கினேன்

ஏதோ ஒரு பயணம் மேற்க்கொண்டது

போலிருந்தது அந்த அனுபவம்

மற்றபடி தூங்கும் அழகிகள் யாரையும்

தொந்தரவு செய்யாமல் அவர்தம்பாட்டுக்கு

தூங்கிக்கொண்டிருந்தார்கள்

என்பதுவே அந்த இல்லத்தின்

விசேசமாகவிருந்தது.

மேலும் தூங்கும் அழகிகளிக் இல்லம்

எப்போதும் பரபரப்புடனேயிருந்தது.

உன் மீதான கொலை

Posted On ஜூலை 10, 2010

Filed under Uncategorized

Comments Dropped leave a response

சித்திரச்சாலையை சிறைச்சாலையாக்குகிறதுன்
தூரிகையின் சலனங்கள் இன்று
தூரிகை ஒரு கருவி மாத்திரமே
உனது சொல்லோ,எண்ணமோ தான்
அதன் இயலாமையை இலாவகமாக்குகிறது
விரித்து வைக்கப்பட்ட கான்வான்சின்
நாற்புறமும் ஆணிகளை அறைந்து விட்டாய்
அங்கிருந்தே சிறைச்சாலையின் கரு
உற்பத்தியாகுகிறது
சுவரில் சாய்ந்து நிற்க சொல்லி
கைதியின் பின்புறத்தில்
தூரிகையால் ஓவியம் வரைகிறாய்
சித்திர கூடம் உண்மையாகவே
சிறைச்சாலை விதிகளை நிறைவேற்றுகிறது
இங்கே சிறு வித்தியாசம் உள்ளது
நிறங்கள் எடுத்து ஓவியம் பூச தேவையில்லை
தூரிகையால் உடம்பை அறுத்து
வழியும் உதிரத்தை நனைத்தால்
சிவப்பு நிறம் என்று சொல்லி விடலாம்
வளைத்து வளைத்து தூரிகையால்
எழுத எழுத சவுக்கடிதான்
விழுகிறது என்று அவன் கத்தப்போவதில்லை
கான்வாசில் நிற்கும் அவன்
அழப்போவதில்லை என்ற தைரியம்
தூரிகையை கழுவு
அதில் ரத்தம் படிந்திருக்கிறது என்று
சொல்ல யாருமில்லை
ஆயினும் தூரிகையை கழுவி வைப்பதை
ஆயுதசாலை உறை வாளோ,கேடமோ இருக்குமிடம் பார்த்து
வைப்பதால்
தூரிகையை தண்ணிரால் கழுவுகிறாய்
அதை தூரிகை ஜாடியில் வைக்க முயலுகிறாய்
கையோடு தூரிகை சேர
பிரிக்க முடியாத முடிச்சொன்று விழ
உன் ஒரு விரலில் மயிர்க்கற்றை
பதைக்கும் உன் முகம் காண
கான்வாசில் இருந்த அவன்
மெல்ல முகம் திருப்புகிறான்
சித்திர கூடம் சிறைகூடமாகி
சித்திரவதை கூடமாகி விட்டது
இப்போது.

உயிர்பெருக்கில் குளிர்காய்தலை குறித்து

Posted On மே 18, 2010

Filed under Uncategorized

Comments Dropped leave a response

விரைக்கும் உச்சத்தின் அடிவானத்தில்

பதாகையை நீட்டுகிறதென் உயிர்பெருக்கு

அதன் நிழலில் நீர் பருகிடவும்

ஓய்வெடுக்கவும் கனவு சுந்தரிகள்

காத்திருக்கின்றனர்

மணி மண்டபத்தில் அரசாளும்

கட்டளைகளுக்கு தம்மையே அர்பணித்த

விழிகளின் திரையில்

போதை ஊற்றுக்கள் பீறிட்டெழுகின்றன

உடல் வாதைகளை கழற்றி வைத்து

சொப்ன ரூபங்களில் மிதந்தலைகிறார்கள்

அரளிப் பூக்களைப் போல

எரியும் நடு நிசியிலோ மெல்ல

தீமூட்டி அதன் தழல்களில்

உலர வைக்கின்றனர் நெடுநாள் ஆசைகளை

குளிர்காய்ந்து பெய்மறந்து உலாவுகையில்

எனது காமம் உலகங்களுக்கு அப்பால்

பயணிக்க எத்தனிக்கின்றன

யாகம் செய்தோ,மோன தவம் செய்தோ

மீட்டெடுக்கின்றனர் எனதுடலை

அதன் யவ்வன திரட்சி மாறாமலே

நறுமணங்களையும்,தூபங்களையும்

சுழலவிட மெல்ல அசைந்து

உச்சத்தையெட்டுகிறது

மீண்டும் அவர்கள் வருகிறார்கள்

நிர்வாணத்தை நனைத்து உயர

பருந்தென பறந்து போகையில்

கூழாங்கற்களென உருண்டு போகிறது

என் நெடுநாள் குறிகள் யாவும்

சப்தம்

Posted On ஏப்ரல் 15, 2010

Filed under Uncategorized

Comments Dropped leave a response

உனது கீழ் பாய்தலில்
எனது மேனி நடுங்குகிறது
கழன்று போகிறதென் அகம்
விழும் ஒவ்வொரு சுவடும்
மேதாவி நீயோ
என கேலி செய்கிறது
கண்மூடி நின்றிருக்கிறேன்
இமைதொட்டு
நாபி தொட்டு
நெஞ்சை பிடித்திழுக்கும்
ஒரு பெரும் சலனம்
தேகம் இல்லாதிருந்தால்
கரைந்திருப்பேனோ
இரைச்சல் காதை குடைந்து
கபாலத்தில் நுழைந்து
அறிந்தவற்ரையும்
அறியாதவற்ரையும்
சிதறடித்து விடுகிறது
ஒரு வெறும் ஜடம் போல்
ஆகிவிட்டேன்
உறைந்து போன என்னில்
விடுதலை பெற்றன
ஒரு நூறு பறவைகள்
ஒரே ஒரு சப்தமெழுப்பி

சாவை துணைக்கழைத்தல்

Posted On ஏப்ரல் 15, 2010

Filed under Uncategorized

Comments Dropped leave a response

சுருக்கிடப்பட்ட கயிறை நன்றாக
இழுத்து பார்த்துக்கொள்கிறானவன்
நாற்காலி ஒன்றின் மீதேறி
கயிற்றை தலைக்குள் விட்டு
சுருக்கை சரி செய்து கொள்கிறான்
தான் தற்கொலை செய்து கொள்ள
யாரும் காரணமில்லை
என்று எழுத தோன்றியது அவனுக்கு
மேஜையில் பேனாவோ,காகிதமோ
காணவில்லை
பரபரப்பு அடைகிறானவன்
உடனே செய்து முடித்தாகவேண்டும்
கொஞ்சமும் தாமதித்தால்
எல்லாமே வீண்
யாராவது வரக்கூடும்
சமயமும் இல்லை
இனி கதவை திறந்து
காகிதத்தையும்,பேனாவையும்
எடுப்பதற்க்குள்…….
கதவையும் திறக்க வேண்டும்
கதை திறந்தால் நாற்காலி தெரியும்
அவற்றை முதலில் மறைக்க வேண்டும்
எல்லாம் பாழாகி விடுமோ
என்ற பயமும் இப்போது
கயிறை மறைத்து
நாற்காலியை தூரவைத்து
தாழ்பாழை திறக்க போகையில்
கேட்டது அம்மாவின் குரல்
“கதவ மூடிகிட்டு உள்ளே
என்ன பண்றே?”
கதை திறந்த போது
சாவு ஓடிப்போயிற்று.

விருந்து

Posted On மார்ச் 13, 2010

Filed under Uncategorized

Comments Dropped leave a response

னது அவயங்கள் யாவையும் வெட்டி
உங்கள் முன் பரிமாற வைக்கப்பட்டிருக்கிறது
ரத்த வாடை வீசாத மொழுக்கான
தோல்களற்றவையவை
உங்களில் ஒருவன் சொல்லுகிறான்
முன்பும் இதனொரு சுவையை அறிந்தேயிருக்கிறேன்
பாலித்தீன் பைகள் போலிருக்கும்
மேலுறையை பிரித்தெடுத்துவிடுகின்றனர்
அப்போது தான் அந்த சர்ச்சை உருவாகியது
மாமிசங்கள் இல்லாத தலை எதற்கு
நீங்கள் அவயங்களை புசிக்காமலே
வாதிடுகிறீர்
விருந்துகளிலும்,வைபவங்களிலும்
கேட்காத பேச்சாக இருந்தது அது
ஒவ்வொருவரின் தட்டுகளிலும் இருந்த
அவயங்களுக்கு ஒப்ப
அவர்கள் கொலைவெறி தாக்குதல்களில்
அவயங்கள் விழத் தொடங்கின
எனது தலையை தட்டில் வைத்திருந்தவன்
தலையை மிதித்துக் கொண்டு விழுகிறது உடல்
கால்களற்றவன் தவழத்துவங்குகிறான்
கைகள் இரண்டையும் இழந்தவன்
நிலை குலைந்து போயிருந்தான்
ரொம்ப காலத்துக்கு பிறகு நான்
ஒரு விருந்தில் கலந்து கொண்டிருந்தேன்

எல்லாமாகி நின்றதுவே

Posted On பிப்ரவரி 9, 2010

Filed under Uncategorized

Comments Dropped leave a response

சுடரொளி நீயோ என திகைத்து
நிற்க்கும் இவ்வொரு வேளையில்
வானிலாகி போனதுவோ
மண்ணாகி இளகி போன நீ
இங்கும் எங்குமின்றி எல்லாமே
வியாபித்து கருணை பொழிதலிலும்
எல்லையில்லா விதி செய்து
உயருமொரு வல்லமையிலும்
பொறியொன்று உள்ளதோ
திற்ந்து காண்பிக்கவோ
திறந்திட செய்வதற்க்கோ
யாருக்குமிங்கே வாய்த்திராத
உன்னொரு சொல்லிலும்
இல்லையோ
மனித பதர் கண்டு
பதைத்து போகுமிந்த
இளகிய விழியின் ஒரு
துளி சுடர்

« முன்னைய பக்கம்அடுத்த பக்கம் »