இரண்டு கவிதைகள்
தாமரைப் பூ பறித்திருக்கிறீர்களா? அதை எப்படி பறிப்பது என்று தெரியவில்லை.குற்றுயிரும் குலையுயிரும் இல்லாமல்
உயிருடன் ஒரு பூ வேண்டும்.
***
குட்டியூண்டு நிலவையும்
ஓடிபிடிக்க சூரியனையும்
மகளுக்கு கொடுத்துவிட்டேன்
விடியும் வரை
குடத்தில் சொட்டு சொட்டாய் விழுந்து கொண்டிருக்கும் வானத்தை நிறைத்து விட்டால் குளித்து முடித்து விடலாம்
பின்னர் நட்சத்திரங்களால் ஆன உடையினை உடுத்தி காலையில் கடவுளை பார்க்க போக வேண்டும்.வானவில்லில் அவளுக்கு சவாரி செய்வது பிடிக்கும் இல்லையென்றால்
முருகனிடம் மயிலை கேட்க வேண்டும்
வாகனம் முக்கியமில்லையா?
மறுமொழியொன்றை இடுங்கள்